பெங்., விமான நிலையத்தில் 16 அடி உயர சிற்பம் திறப்பு
பெங்., விமான நிலையத்தில் 16 அடி உயர சிற்பம் திறப்பு
ADDED : ஏப் 26, 2026 11:46 PM

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில், 'பெங்களூரின் ஆன்மா' என்ற பெயரில் 16 அடி உயர சிற்பம் திறக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தில், 'பெங்களூரின் ஆன்மா' என்ற பெயரில், 16 அடி உயர சிற்பம் நிறுவப்பட்டு இருந்தது.
இந்த சிற்பத்தை வடிவமைத்த ஸ்பெயின் நாட்டின் கலைஞர் ஜாம் பிளென்சாவால், பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் ஷா, கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே, இந்தியாவுக்கான ஸ்பெயின் துாதர் அன்டோனியா மார்ச் புஜோல், விமான நிலைய அதிகாரி ஹரி மார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த 16 அடி உயர சிற்பத்தில் கன்னடம், அரபு, சீனா, தமிழ், கொரியன், கிரேக்கம், ஹிந்தி, லத்தீன் உள்ளிட்ட மொழிகளின் எழுத்துகள், கணித குறியீடுகள் இடம் பெற்று உள்ளன.
பெங்களூரின் கலாசாரம், பன்முக தன்மை, படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு மரியாதை செல்லும் வகையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பயோகான் தலைவர் கிரண் மஜும்தார் ஷாவின் வேண்டுகோளை ஏற்று, சிற்பத்தை வடிவமைத்தாக ஜாம் பிளென்சவாவால் கூறி உள்ளார்.
'சிகாகோ, லண்டன் போன்ற பெருநகரங்களின் விமான நிலையங்களில் நான் வடிவமைத்த சிலைகள் உள்ளன. பெங்களூரு விமான நிலையத்திலும் நான் வடிவமைத்த சிலை இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது' என்றும் பெருமிதம் அடைந்து உள்ளார்.
