/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., கிழக்கில் சிறப்பு துாய்மை பணிகள் 160 துப்புரவு பணியாளர்கள் பங்கேற்பு

ADDED : நவ 15, 2025 11:05 PM

பெங்களூரு: பெங்களூரு கிழக்கு மாநகராட்சியில் 160 துப்புரவு பணியாளர்கள் நேற்று நான்கு மணி நேரம் சிறப்பு துாய்மை பணிகள் மேற்கொண்டனர்.
பெங்களூரு கிழக்கு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
கே.ஆர்., புரம் சட்டசபை தொகுதியில் உள்ள டி.சி., பாளையா பிரதான சாலை, ராமமூர்த்தி நகர் பாலம், பட்டரஹள்ளியில் 8 கி.மீ., துாரம்; மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை 35ல் வர்த்துார் கோடி சந்திப்பு முதல் காடுகோடி பாலம் வரை 12 கி.மீ., துாரத்திற்கு துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணியில் 160 துப்புரவு பணியாளர்கள், 20 டிராக்டர்கள், 8 ஆட்டோ டிப்பர்கள், 1 பொக்லைன், மரம் வெட்டும் வாகனம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இதில், 5,000 கிலோ அளவிலான குப்பைகள், பழைய வீட்டு பொருட்கள், ஆபத்தான மரக்கிளைகள், சாலைகளில் தொங்கிய நிலையில் இருந்த 3,600 மீட்டர் நீளமுள்ள கேபிள்கள், 82 விளம்பர பதாதைகள் அகற்றப்பட்டன.
கடைகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 100 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களிடமிருந்து 35 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் காலை 6:00 மணி முதல் காலை 10:00 மணி வரை நடந்தது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.