ADDED : மே 15, 2026 03:49 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பயணியர் பாதுகாப்புக்காக, கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில், 168 ஏ.ஐ., திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த கேமராக்கள் ரயில் நிலையம் முழுதும் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டு உள்ளன. பாதுகாப்பு மேலாண்மை, பயணியர் நடமாட்டம் உள்ளிட்டவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்க கூடியவை.
அதுபோல, கேமராக்களில் 'ரிக்கார்டு' செய்யப்படும் காட்சிகள் 'ஹைகுவாலிட்டி' வடிவில் இருக்கும்.
இதன் மூலம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நிச்சயம் மேம்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
