sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அங்கன்வாடி மையங்களுக்கு 17,454 எல்.இ.டி., 'டிவி'க்கள்

 அங்கன்வாடி மையங்களுக்கு 17,454 எல்.இ.டி., 'டிவி'க்கள்

 அங்கன்வாடி மையங்களுக்கு 17,454 எல்.இ.டி., 'டிவி'க்கள்


ADDED : பிப் 17, 2026 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 11:45 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மத்திய அரசின், 'சக்ஷம்' திட்டத்தின் கீழ், கர்நாடகாவின் அங்கன்வாடி மையங்களுக்கு, 17,454 எல்.இ.டி., 'டிவி'க்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து, மகளிர், குழந்தைகள் நலத்துறை வெளியிட்ட அறிக்கை:

அங்கன்வாடி கட்டடங்கள், தரம் உயர்த்தப்படுகின்றன. பழைய கட்டடங்களை அகற்றி, புதிதாக கட்டுவதற்கு, 2024 நவம்பரில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின் நிதித்துறையிடமும் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது பணிகள் நடந்து வருகின்றன.

அபாயமான கட்டடங்களில் இயங்கும் அங்கன்வாடிகள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. அனைத்து அங்கன்வாடிகளும் சொந்த கட்டடத்தில் இயங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி சிறார்களின் வசதிக்காக, மத்திய அரசின், 'சக்ஷம்' திட்டத்தின் கீழ், கர்நடகாவின் அங்கன்வாடிகளுக்கு 17,454 எல்.இ.டி., - 'டிவி'க்கள் வழங்கப்பட்டுள்ளன. முறைப்படி டெண்டர் அழைத்து, எல்.இ.டி., 'டிவி'க்கள் வாங்கி, அந்தந்த அங்கன்வாடிகளில் சேர்க்கப்பட்டன. இதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us