sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

காஷ்மீரில் இருந்து 178 பேர் பத்திரமாக மீட்பு 2 கன்னடர்கள் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

/

காஷ்மீரில் இருந்து 178 பேர் பத்திரமாக மீட்பு 2 கன்னடர்கள் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

காஷ்மீரில் இருந்து 178 பேர் பத்திரமாக மீட்பு 2 கன்னடர்கள் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

காஷ்மீரில் இருந்து 178 பேர் பத்திரமாக மீட்பு 2 கன்னடர்கள் உடல் அரசு மரியாதையுடன் தகனம்


ADDED : ஏப் 25, 2025 05:44 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடகாவின் 178 பேர், சிறப்பு விமானத்தில் நேற்று பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட, இரண்டு கன்னடர்களின் உடல்களும், அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டன.

காஷ்மீருக்கு சுற்றுலா சென்று இருந்த கர்நாடகாவின் ஷிவமொக்கா டவுன் விஜயநகரை சேர்ந்த மஞ்சுநாத் ராவ், 47, பெங்களூரு மத்திகெரேயின் பாரத் பூஷன், 40, ஆகியோரை, கடந்த 22ம் தேதி பஹல்காம் என்ற இடத்தில், பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

இருவரின் உடல்களும் காஷ்மீரில் இருந்து டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

டில்லியில் இருந்து கார்கோ விமானத்தில் இருவரின் உடல்களும் பெங்களூருக்கு வந்தன. ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு விமானம் தரையிறங்கியது. இருவரது உடல்களுக்கும், மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா அஞ்சலி செலுத்தினர்.

கவர்னர் அஞ்சலி


ஆம்புலன்ஸ்கள் மூலம் மஞ்சுநாத் ராவ் உடல் ஷிவமொக்காவுக்கும்; மத்திகெரேயில் உள்ள வீட்டிற்கு பாரத் பூஷன் உடலும் சென்றன. இருவரின் உடல்களை பார்த்து குடும்பத்தினர், நண்பர்கள் கதறி அழுதனர். பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பாரத் பூஷன் உடலுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, அமைச்சர் ராமலிங்கரெட்டி, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதை


மஞ்சுநாத் ராவ் உடலுக்கு, மத்திய உணவு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கர்நாடக பள்ளிக்கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, ஷிவமொக்கா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பிராமண முறைப்படி மஞ்சுநாத் ராவ்; ஒக்கலிக சமூக முறைப்படி பாரத் பூஷன் உடல்களுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

மஞ்சுநாத் ராவ் உடல் இருந்த சிதைக்கு, அவரது மகன் அபிஜே தீ மூட்டினார். பாரத் பூஷன் உடல், மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. துப்பாக்கி குண்டு முழங்க, இருவரின் உடல்களும் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன.

இதற்கிடையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்று, அங்கு சிக்கி தவித்த கன்னடர்களை மீட்டு வர, தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட், சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். காஷ்மீரின் பல பகுதிகளில் இருந்த கன்னடர்கள் 178 பேர், சிறப்பு விமானத்தில் நேற்று பெங்களூரு அழைத்து வரப்பட்டனர். 'கடவுள் புண்ணியத்தால் பத்திரமாக வந்து உள்ளோம். எங்களை மீட்க உதவிய, கர்நாடக அரசுக்கு நன்றி' என்று தெரிவித்தனர்.

அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது:

முதல்வர் சித்தராமையா வழிகாட்டுதல்படி, காஷ்மீருக்கு கன்னடர்களை மீட்க சென்றேன். போலீஸ் அதிகாரி சேத்தனும், நானும் சேர்ந்து கன்னடர்கள் பற்றி தகவல் சேகரித்தோம். கன்னடர்களின் மொபைல் போன் நம்பர்கள் கிடைக்க, ஊடகத்தினரும் பெரும் உதவியாக இருந்தனர்.

வழிகாட்டி


காஷ்மீரில் இருந்து 178 கன்னடர்களை அழைத்து வந்து உள்ளோம். அங்கு சென்ற 90 முதல் 95 சதவீத கன்னடர்கள் பத்திரமாக திரும்பி உள்ளனர். மேலும் 12 பேர் ஜம்மு, காத்ராவில் உள்ளனர். அவர்கள் விரைவில் விமானத்தில் வருவர். அவர்களுக்கும் வழிகாட்டி உள்ளோம்.

என் வாழ்நாளில் நான் பார்த்த மோசமான சம்பவம் இது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களால் அதை மறக்கவே முடியாது. மஞ்சுநாத் ராவின் மனைவி, பயங்கரவாதிகளிடம் துணிச்சலாக பேசி உள்ளார். அது, இந்திய பெண்களால் மட்டும் முடியும்.

பாதுகாப்பு குறைபாடு பற்றி, யாரும் பேச வேண்டாம். அரசியல் செய்யும் நேரம் இல்லை இது. காஷ்மீரில் இருந்த கன்னடர்கள் பயத்தில் இருந்தனர்.

நான் சென்ற பின், அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. காஷ்மீரில் 40 இடங்களுக்கு சென்று, கன்னடர்களை அழைத்து வந்தேன். எந்த உடை அணிந்து சென்றேனோ, அதே உடையில் திரும்ப வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தையை காப்பாற்றினேன்

பாரத் பூஷன் மனைவி டாக்டர் சுஜாதா அளித்த பேட்டி:

காஷ்மீருக்கு கடந்த 18ம் தேதி சுற்றுலா சென்றோம். கடந்த 22ம் தேதி திரும்பி வர இருந்தோம். அன்றைய தினம் மதியம் பஹல்காம் சென்றோம். எங்களுடன், இன்னொரு குடும்பத்தினரும் சுற்றுலாவில் இணைந்தனர். மதியம் 1:30 மணி இருக்கும்.

உணவு சாப்பிடுவதற்கு புறப்பட்டோம். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. பறவை, விலங்குகளை விரட்ட இருக்கலாம் என்று நினைத்தோம். அதன்பின் தான் தெரிந்தது பயங்கரவாதிகள் தாக்குதல் என்று. நான், பாரத், 3 வயது குழந்தை ஒரு கூடாரத்தின் பின் பதுங்கி இருந்தோம்.

நாங்கள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து 100 அடி துாரத்தில் ஒரு முதியவர் பதுங்கி இருந்தார். அவர் அருகில் வந்த பயங்கரவாதி, முதியவரிடம் ஹிந்தியில் பேசினார். 'நீங்கள் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். எங்கள் பிள்ளைகள் அங்கு இறந்து கொண்டு இருக்கின்றனர்' என்று ஆவேசமாக கூறினார். பின், முதியவரை சுட்டு கொன்றார்.

எங்கள் அருகே பயங்கரவாதி வந்த போது, 'குழந்தை உள்ளது விட்டுவிடுங்கள்' என்று கெஞ்சினோம். அவன் கேட்கவில்லை. எனது கணவர் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டான். எனது குழந்தையை கொன்று விட கூடாது என்பதற்காக, அங்கிருந்து நானும் ஓடினேன். ஒரு குதிரையில் ஏறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றேன். நான் டாக்டர் என்பதால், எனது கணவர் உயிருடன் இருக்க மாட்டார் என்பதை அறிந்து கொண்டேன்.

இவ்வாறு கண்ணீருடன் கூறினார்.






      Dinamalar
      Follow us