/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் இரு ஆண்டுகளில் 1,800 பெண்கள் பலாத்காரம்
/
கர்நாடகாவில் இரு ஆண்டுகளில் 1,800 பெண்கள் பலாத்காரம்
கர்நாடகாவில் இரு ஆண்டுகளில் 1,800 பெண்கள் பலாத்காரம்
கர்நாடகாவில் இரு ஆண்டுகளில் 1,800 பெண்கள் பலாத்காரம்
ADDED : அக் 31, 2025 11:22 PM

பெங்களூரு: ''கர்நாடகாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,800 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்,'' என, மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் ஷோபா தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரித்துள்ளன. முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டத்தில் பலுான் விற்பனை செய்ய வந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,800 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். மாநில அரசு இறந்துவிட்டது. இதனால், குற்றவாளிகளுக்கு தைரியம் அதிகமாகிவிட்டது. பெண்கள் பாதுகாப்பில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது.
மக்கள் நலன் மீது கவனம் செலுத்தாமல், உட்கட்சி பிரச்னையிலேயே அதீத கவனம் செலுத்துகிறது. அடுத்த முதல்வர், அடுத்த துணை முதல்வர், அமைச்சர் என்பதிலேயே ஆளுங்கட்சியினர் கவனம் செலுத்துகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் 20க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதெல்லாம் சாதாரண விஷயமா? கருணைக்கொலை செய்யக் கோரி ஒப்பந்ததாரர்கள் கடிதம் எழுதியது, இந்த ஆட்சியில் தான் நடந்து உள்ளது. பெங்களூரில் வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டவர்கள் மீண்டும் வீட்டுக்கு வருவரா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு, சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
இவ்வளவு குறைகள் இருந்தும், சாதனை என சொல்லிக் கொண்டு பிரசாரம் செய்வது காங்கிரசாரால் மட்டுமே முடியும். பீஹார் தேர்தலுக்கு யார் அதிக பணம் கொடுப்பது என முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் என இருவரும் போட்டியிட்டு வருகின்றனர். இந்த போட்டியால் மக்களின் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

