/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பதவிக்காலம் முடிந்ததா: குழப்பத்தில் தங்கவயல் நகராட்சி கவுன்சிலர்கள்
/
பதவிக்காலம் முடிந்ததா: குழப்பத்தில் தங்கவயல் நகராட்சி கவுன்சிலர்கள்
பதவிக்காலம் முடிந்ததா: குழப்பத்தில் தங்கவயல் நகராட்சி கவுன்சிலர்கள்
பதவிக்காலம் முடிந்ததா: குழப்பத்தில் தங்கவயல் நகராட்சி கவுன்சிலர்கள்
ADDED : அக் 31, 2025 11:22 PM
தங்கவயல்: தங்கவயல் நகராட்சி கவுன்சிலர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆயினும் நீதிமன்ற உத்தரவை கவுன்சிலர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
கோலார் மாவட்டத்தில் பங்கார்பேட்டை நகராட்சி கவுன்சிலர்கள் பதவிக்காலம் அக்டோபர் 23லும், தங்கவயல், முல்பாகல் நகராட்சி கவுன்சிலர்களின் பதவிக் காலம் நேற்றுடனும் முடிவடைந்தது. கோலார் நகராட்சி கவுன்சிலர்களின் பதவிக்காலம் இன்றுடனும், சீனிவாசப்பூர் டவுன் சபைக்கு நவம்பர் 9, மாலுார் நகராட்சிக்கு நவம்பர் 10ம் தேதியிலும் பதவிக்காலம் நிறைவடைகிறது.
தங்கவயல் நகராட்சி கவுன்சிலர்களின் பதவிக்காலம் அக்டோபர் 31ல் முடிவடைவதாக கர் நாடக மாநில அரசு, தங்கவயல் நகராட்சிக்கு அக்டோ பர் 29ல் சுற்றறிக்கை அனுப்பியது. ஆயினும், நகராட்சியின் 34 கவுன்சிலர்கள் தங்களின் பதவிக்காலம் நீடிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நகராட்சியின் இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிக்காலம் 30 மாதங்கள். ஆனால் 14 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளதால் மேலும் 16 மாதம் பதவியை நீடிப்புச் செய்ய கோரியிருந்தனர்.
இவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இவர்களின் பதவிக்காலம் நீடிக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆயினும் நிர்வாக அதிகாரியை நேற்று வரை நியமிக்கவில்லை என்று நகராட்சி ஆணையர் ஆஞ்சநேயலு தெரிவித்துள்ளார்.
எனவே, தலைவர், துணைத் தலைவர், நிலைக்குழு தலைவர் அறைகள் பூட்டு போடப்படுகிறதா, இல்லையா என்பது இன்று தெரியவரும்.

