ADDED : செப் 15, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
ஜி.பி.ஏ.,வின் கீழ் செயல்படும் ஐந்து மாநகராட்சிகளிலும், ஏரிகள், நடமாடும் டேங்கர் லாரிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி அன்று (நேற்று முன்தினம்) மட்டும் பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சியில் 28,860 விநாயகர் சிலைகள்; கிழக்கு மாநகராட்சியில் 8,460; வடக்கு மாநகராட்சியில் 16,857; தெற்கு மாநகராட்சியில் 10,372; மேற்கு மாநகராட்சியில் 1,20,079 என மொத்தம் 1,84,628 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
