ADDED : செப் 15, 2026 09:43 PM

குடகு: துப்பாக்கியால் மனைவியை சுட்டு கொன்ற முதியவர், தன்னை தா னே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடகு மாவட்டம், சோமவார்பேட் தாலுகா கும்பரகடிகே கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா, 74; விவசாயி. இவரது மனைவி போஜம்மா, 72. இவர்களது மகன்களுக்கு திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். தம்பதி மட்டும் தனியாக வசித்தனர்.
நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. இருவரையும் அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்தனர். சிறிது நேரத்தில் சுப்பையா வீட்டில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
பக்கத்து வீட்டினர் சென்று பார்த்த போ து ரத்த வெள்ளத்தில் சுப்பையாவும், போஜம்மாவும் இறந்து கிடந்தனர். மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று, கணவரும் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. விவசாயி என்பதால் வனவிலங்குகளை விரட்ட நாட்டு துப்பாக்கியை, சுப்பையா பயன்படுத்தியதும் தெரிந்தது.
