/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின் உபகரணங்கள் கொள்ளை 19 ஊழியர்கள் தலைமறைவு
/
மின் உபகரணங்கள் கொள்ளை 19 ஊழியர்கள் தலைமறைவு
ADDED : ஆக 05, 2025 07:04 AM
கோலார் : கோலாரின் பெஸ்காம் நிறுவன கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2.10 கோடி ரூபாய் மதிப்பிலான மின் உபகரணங்களை முறைகேடு செய்ததாக, மூன்று பொறியாளர் மற்றும் 15 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோலார் நகர போலீஸ் நிலையத்தில், சமூக ஆர்வலர் கே.ஆர்.ராஜண்ணா என்பவர், வீடியோ மற்றும் சில ஆவணங்களுடன், புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், டெண்டர் அளிக்காமல், 2.10 கோடி ரூபாய் மதிப்பிலான பெஸ்காமின் மின் உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக, பெஸ்காம் அலுவலகத்திற்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், பெஸ்காம் அலுவலக அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து புகார் தொடர்பாக பெஸ்காம் கிடங்கின் பொறுப்பாளர்களான கரீமுல்லா ஹுசைனி, 50, நஹித் பாஷா, 46, ஜனார்தன், 47, ஆகிய பொறியாளர்கள் மற்றும் 15 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை அறிந்ததும், மூன்று பொறியாளர்களும், 15 ஒப்பந்த தொழிலாளர்கள், பெஸ்காமின் வாகன ஓட்டுநர் தலைமறைவாகி விட்டனர்.