தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறையில் கைதிகள் பயன்படுத்திய 19 மொபைல் போன்கள் பறிமுதல்

 சிறையில் கைதிகள் பயன்படுத்திய 19 மொபைல் போன்கள் பறிமுதல்

 சிறையில் கைதிகள் பயன்படுத்திய 19 மொபைல் போன்கள் பறிமுதல்


ADDED : நவ 29, 2025 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் நடத்திய சோதனையில், கைதிகளிடம் இருந்து 19 மொபைல் போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்தி, மது அருந்தி விட்டு குத்தாட்டம் போடும் வீடியோ, சில வாரங்களுக்கு முன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ்., அதிகாரி அன்ஷுகுமார் தலைமையிலான போலீஸ் குழுவினர், பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 26ம் தேதி அதிகாலை 12:50 முதல் அதிகாலை 1:25 மணி வரையும்; காலை 7:20 முதல் காலை 7:50 வரை இரு கட்டங்களாக அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, கைதிகள் பயன்ப டுத்திய 19 மொபைல் போன்கள், 16 சிம் கார்டுகள், 4 சார்ஜர் ஒயர்கள், 3 புளுடூத் இயர்போன்கள், 15,800 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதிகள் சாகர், முனிராஜு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய ப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us