/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏரி நீர் குடித்த 19 பேர் பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி
/
ஏரி நீர் குடித்த 19 பேர் பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி
ஏரி நீர் குடித்த 19 பேர் பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி
ஏரி நீர் குடித்த 19 பேர் பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி
ADDED : செப் 10, 2025 10:06 PM

தார்வாட் : தார்வாடின் நவல்குந்தில் ஏரி நீரை குடித்த 19 பேர் வயிற்று வலி, வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தார்வாட் மாவட்டம், நவல்குந்தின் குடிசாகரா கிராமத்தில் உள்ள ஏரியை, உள்ளூர் கிராம பஞ்சாயத்து நிர்வகித்து வருகிறது.
கடந்த மாதங்களில் பெய்த கன மழையால், சுற்றுப்பகுதிகளில் இருந்து நீர், ஏரியில் கலந்தது. இதனால் ஏரியை சுத்திகரிக்கவில்லை.
இந்நிலையில், இந்த ஏரி தண்ணீரை குடித்த இக்கிராமத்தை சேர்ந்த இரு குழந்தைகள், ஒன்பது ஆண்கள், எட்டு பெண்கள் என மொத்தம் 19 பேருக்கு வயிற்று வலி, வாந்தி, பேதி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ஹொனகேரி, மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். மீண்டும் யாராவது மருத்துவமனைக்கு வந்தால், அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன்.
மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை. மக்களின் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு, தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தி உள்ளே ன்.
ஏரி நீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைத்தபின், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.