/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தசரா முன்னேற்பாடுகளுக்கு 19 துணை கமிட்டி அமைப்பு
/
தசரா முன்னேற்பாடுகளுக்கு 19 துணை கமிட்டி அமைப்பு
ADDED : ஜூலை 07, 2025 03:05 AM
மைசூரு : தசரா திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளை, மைசூரு மாவட்ட நிர்வாகம் துவக்கியுள்ளது. இதற்காக 19 துணை கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மைசூரு மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, நேற்று அளித்த பேட்டி:
இம்முறை செப்டம்பர் 22 முதல், அக்டோபர் 2 வரை உலக பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை துவக்கியுள்ளோம். தசரா ஏற்பாடுகளை கவனிக்க, 19 துணை கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளின் அதிகாரிகள், துணை சிறப்பு அதிகாரிகள், செயல் தலைவர்கள், செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சில கமிட்டிகளுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரவேற்பு, அழைப்பிதழ் துணை கமிட்டி, ஊர்வலம், அணிவகுப்பு, நினைவூர்தி, விவசாய தசரா, விளையாட்டு, அரண்மனை மேடை, மின் விளக்குகள் அலங்காரம், யோகா தசரா, பெண்கள், குழந்தைகள் தசரா, உணவு மேளா, மல்யுத்தம், தசரா யானைகளை அழைத்து வருவது என, அனைத்துக்கும் தனித்தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.