/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
19 வயது வாலிபர் கடத்தி கொலை காதலியின் தம்பி, நண்பர்களுக்கு வலை
/
19 வயது வாலிபர் கடத்தி கொலை காதலியின் தம்பி, நண்பர்களுக்கு வலை
19 வயது வாலிபர் கடத்தி கொலை காதலியின் தம்பி, நண்பர்களுக்கு வலை
19 வயது வாலிபர் கடத்தி கொலை காதலியின் தம்பி, நண்பர்களுக்கு வலை
ADDED : மே 04, 2025 11:16 PM

தேவனஹள்ளி: தன்னை விட 2 வயது மூத்த பெண்ணை காதலித்த 19 வயது வாலிபர் கடத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். காதலியின் தம்பி, அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி அருகே நீர்குண்டேபாளையா கிராமத்தில் வசித்தவர் பிரீத்தம், 19. உணவு விற்பனை நிறுவனத்தில் டெலிவிரி பாயாக வேலை செய்தார். கடந்த 2ம் தேதி இரவு 9:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும், வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
அவரது மொபைல் போனுக்கு பெற்றோர் அழைத்த போது 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. நண்பர்கள் வீடுகளில் பிரீத்தமை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பிரீத்தம் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் தேவனஹள்ளி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.
நேற்று காலை மஞ்சனஹள்ளி என்ற கிராமத்தில், முட்புதரில் பிரீத்தம் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த தேவனஹள்ளி போலீசார் அங்கு சென்று, பிரீத்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் கொலையானது தெரிந்தது.
பிரீத்தமும், நீர்குண்டேபாளையா கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்து உள்ளனர். அந்த இளம்பெண் சித்ரதுர்காவில் எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். காதல் விவகாரம் தெரியவந்ததும் பிரீத்தமை, இளம்பெண்ணின் குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர். காதலை கைவிடும்படியும் கூறி உள்ளனர். ஆனால் பிரீத்தம் கேட்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் சித்தி மகன் ஸ்ரீகாந்த், அவரது நண்பர்கள் சேர்ந்து பிரீத்தமை கடத்தி சென்று மது குடிக்க வைத்து, அவரை தாக்கி கொலை செய்தது தெரிந்து உள்ளது. ஸ்ரீகாந்த், அவரது நண்பர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கொலை குறித்து இளம்பெண்ணின் தந்தை கூறுகையில், 'கொலை செய்யப்பட்ட பிரீத்தம், எனது மகளுக்கு காதல் தொல்லை கொடுத்தார். கடந்த சில மாதங்களாக எனது மகள், என்னிடம் அடிக்கடி பணம் கேட்டார். எதற்கு என்று கேட்ட போது சரியாக பதில் சொல்லவில்லை. சமீபத்தில் என் மகள் வீட்டிற்கு வந்த போது, அவரது மொபைல் போனை எடுத்து பார்த்தேன்.
'கூகுள் பே, போன் பே' மூலம் பிரீத்தமுக்கு பணம் அனுப்பியதை கண்டுபிடித்தேன். இதுபற்றி கேட்ட போது, எனது புகைப்படத்தை வைத்து கொண்டு பிரீத்தம் என்னை மிரட்டுகிறான். அவனுக்கு பயந்து பணம் அனுப்புவதாக கூறினார்.
இதுபற்றி எனது மனைவியின் தங்கை மகன் ஸ்ரீகாந்த்துக்கு தெரிந்தது. இதனால் பிரீத்தமை, ஸ்ரீகாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று கொலை செய்து உள்ளார். இதில் எங்கள் பங்கு எதுவும் இல்லை' என்றார்.