தொழிலதிபரை தாக்கி கொள்ளை 2 பேர் கைது; ஐவர் தலைமறைவு
தொழிலதிபரை தாக்கி கொள்ளை 2 பேர் கைது; ஐவர் தலைமறைவு
ADDED : ஜூன் 21, 2026 10:42 PM
கே.ஜி.ஹள்ளி: வீடு புகுந்து தொழிலதிபரை தாக்கி கார், ஸ்கூட்டர், ஐபோன்களை கொள்ளையடித்த வழக்கில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஐந்து பேரை போலீஸ் தேடுகிறது.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளி ஷாம்பூரில் வசிப்பவர் யாசின்; தொழிலதிபர். இ - காமர்ஸ் நிறுவனங்களுக்கு, மின்னணு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். கடந்த, 5ம் தேதி, அவருக்கு அறிமுகமான மோசின், விஜய், இப்ராஹிம், அர்ஷத் உட்பட ஏழு பேர், அவரது வீட்டிற்கு வந்தனர். திடீரென, யாசினை தாக்கிய ஏழு பேரும், வீட்டில் இருந்த, 80,000 ரூபாய், நான்கு ஐபோன்கள், ஒரு லேப்டாப், கார், ஸ்கூட்டரை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பினர்.
யாசின் அளித்த புகாரில், சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, நேற்று முன்தினம் விஜய், இப்ராஹிம் ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை போலீஸ் தேடுகிறது.
ரவுடியான ரூபன் என்பவருக்கும், இந்த வழக்கில் தொடர்பு உள்ளது. தற்போது, அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவரை நீதிமன்ற அனுமதியுடன் வெளியே எடுத்து விசாரிக்கவும், சி.சி.பி., போலீசார் தயாராகி வரு கின்றனர்.
