காப்பகத்தில் இருந்த வங்க தேசத்தின் 2 பெண்கள் ஓட்டம்
காப்பகத்தில் இருந்த வங்க தேசத்தின் 2 பெண்கள் ஓட்டம்
ADDED : ஜூன் 07, 2026 11:33 PM
ஹாசன்: மகளிர் காப்பகத்தில் தங்கியிருந்த வங்க தேசத்தின் இரண்டு பெண்கள் தப்பியோடினர்.
ஹாசன் நகரில் வீடு ஒன்றில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. மே மாதம் அங்கு சென்று திடீர் சோதனை நடத்திய, ஹாசன் நகர மகளிர் போலீசார், சீலா ஷேக், 34, ஸ்வீட்டி மொன்தால், 27, ஆகிய பெண்களை மீட்டனர்.
அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர். இவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. போலியான ஆவணங்களுடன், சட்டவிரோதமாக கர்நாடகாவில் வசிப்பதை, போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த பெண்களை ஹாசனில் உள்ள, மகளிர் காப்பகத்தில் தங்க வைத்திருந்தனர். இப்பெண்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு, மற்ற பெண்கள் உணவருந்தி கொண்டிருந்தனர். அப்போது சீலா ஷேக்கும், ஸ்வீட்டியும் காப்பகத்தின் கேட் மீது ஏறி குதித்து தப்பியோடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
