தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தந்தை, சகோதரி குத்தி கொலை வாலிபர் தற்கொலை முயற்சி

 தந்தை, சகோதரி குத்தி கொலை வாலிபர் தற்கொலை முயற்சி

 தந்தை, சகோதரி குத்தி கொலை வாலிபர் தற்கொலை முயற்சி


ADDED : ஜூன் 07, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொப்பால்: கங்காவதியில், தந்தை, தாய், சகோதரியை குத்தி விட்டு, தானும் குத்தி தற்கொலைக்கு முயற்சித்த மகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தந்தை, சகோதரி உயிரிழந்த நிலையில், தாய் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இது குறித்து, கொப்பால் எஸ்.பி., ராம் எல்.அரசதி நேற்று அளித்த பேட்டி:

கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின் அயோத்யா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட நாயுடு, 48. இவரது மனைவி சவுஜன்யா, 40, மகள் பிரகதி, 19, மகன் வெங்கடமணி, 18. வெங்கட நாயுடுவின் தந்தையும் இவர்களுடன் வசித்தார்.

சம்பவத்தன்று இரவு 9:00 மணியளவி ல் உணவு சாப்பிட்ட பின், அனைவரும் உறங்க சென்ற னர். இரவு 10:00 மணியளவில் இவரின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

அதிர்ச்சியடைந்த வெங்கட நாயுடுவின் தந்தை, மகன் குடும்பத்தினர் தங்கியிருக்கும் அறையை திறக்க முயற்சித்தார்; முடியவில்லை. உடனடியாக பக்கத்து வீட்டினரின் உதவியுடன் கதவை உடைத்து திறந்தபோது, நான்கு பேரும் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதில், பிரகதி க்கு ரத்த போக்கு அதிகரித்ததால், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வெங்கட நாயுடு, சவுஜன்யா, வெங்கடமணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த கங்காவதி கிராமப்புற போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கட நாயுடுவிடம் விசாரித்த போது, இரவு திடீரென விளக்குகளை அணைத்து விட்டு, குடும்ப உறுப்பினர் யாரோ கத்தியால் எங்களை குத்தினார் எனவும், மகன் வெங்கடமணி மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், வெங்கட நாயுடு நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி சவுஜன்யாவும், லேசான காயம் அடைந்த வெங்கடமணியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us