ADDED : மே 03, 2026 11:34 PM
பெலகாவி: பெலகாவியில் கோவில் குளத்தில் குளிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
பெலகாவி நகரின் சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சிவம் பரசுராம கண்டிகர், 7, பரசுராம் நீலஜாகர், 11. கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால், நேற்று காலை இருவரும் பிரசித்தி பெற்ற கபிலேஷ்வர் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் குளிக்க சென்றனர்.
குளித்து கொண்டிருந்தவர்கள், ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் இருவரும் தத்தளித்தனர். தொலைவில் இருந்து பார்த்த சிலர், அவர்களை காப்பாற்ற முயன்றனர். அவர்கள் வருவதற்குள் இருவரும் நீரில் மூழ்கினர்.
உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், கடேபஜார் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், இரு சிறுவர்களின் சடலத்தை மீட்டனர்.
கபிலேஷ்வர் கோவில் குளம் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படவில்லை. குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலியோ அல்லது எச்சரிக்கை பலகையோ இல்லாததே இத்தகைய சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.
