தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பைக் மீது லாரி மோதல் 2 நடன கலைஞர்கள் பலி

பைக் மீது லாரி மோதல் 2 நடன கலைஞர்கள் பலி

பைக் மீது லாரி மோதல் 2 நடன கலைஞர்கள் பலி


ADDED : ஜூன் 17, 2025 08:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 08:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூர: லாரி மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு நடன கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரு ரூரல், நெலமங்களாவில் உள்ள குனிகல் பைபாசில், நேற்று காலை பைக்கில் இருவர் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

எதிர்திசையில் இருந்து வந்த லாரி, எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. பைக் நொறுங்கியது. பைக்கில் சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதை பார்த்த பிற வாகன ஓட்டிகள், நெலமங்களா போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் பெங்களூரு, ஸ்ரீராமபுராவை சேர்ந்த நடன கலைஞர்கள் பிரஜ்வல், 22, சஹானா, 21, என்பது தெரிந்தது.

இவர்கள் இருவரும் துமகூரில் நடன நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, சம்பளத்தை வாங்கிவிட்டு பெங்களூரு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினர். லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us