/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆடம்பர செலவுக்காக திருட்டு; 2 இன்ஜி., மாணவர்கள் கைது
/
ஆடம்பர செலவுக்காக திருட்டு; 2 இன்ஜி., மாணவர்கள் கைது
ஆடம்பர செலவுக்காக திருட்டு; 2 இன்ஜி., மாணவர்கள் கைது
ஆடம்பர செலவுக்காக திருட்டு; 2 இன்ஜி., மாணவர்கள் கைது
ADDED : நவ 16, 2025 10:57 PM
சிக்கபல்லாபூர்: ஆடம்பர வாழ்க்கைக்காக, கல்லுாரியில் படிக்கும் போதே, திருட்டில் ஈடுபட்ட ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சிக்கபல்லாபூர் நகரின் சாம்ராஜ்பேட்டில் வசிப்பவர் சேத்தன், 20. மாண்டியாவை சேர்ந்தவர் அபிஷேக், 20. இருவரும் பெங்களூரின் பிரசித்தி பெற்ற இன்ஜினியரிங் கல்லுாரியில், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து வருகின்றனர். ஒரே கல்லுாரியில் படிப்பதால் நண்பர்களாக இருந்தனர்.
இவர்களுக்கு ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பணம் இல்லை. எனவே இருவரும் சேர்ந்து, வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டனர். சிக்கபல்லாபூர் நகரில் சேத்தனின் வீட்டு அருகில் உள்ள வீடுகளை குறி வைத்தனர்.
சிக்கபல்லாபூர் நகரின் சாம்ராஜ்பேட்டில் வசிக்கும் ஆசிரியை வினுதா வீட்டில் 6.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை திருடினர். அதே பகுதியில் வசிக்கும் சாந்தம்மா வீட்டில் புகுந்து 85,000 ரூபாய் ரொக்கம், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை திருடினர். அந்த பணத்தை ஜாலியாக செலவிட்டனர்.
வினுதா, சாந்தம்மா அளித்த புகாரின்படி, விசாரணை நடத்திய சிக்கபல்லாபூர் போலீசார், மாணவர்கள் சேத்தன், அபிஷேக் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

