/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நைஜீரிய பெண் கொலை 2 நண்பர்களிடம் விசாரணை
/
நைஜீரிய பெண் கொலை 2 நண்பர்களிடம் விசாரணை
ADDED : மே 02, 2025 11:14 PM
சிக்கஜாலா: நைஜீரிய பெண் கொலை வழக்கில், நண்பர்கள் இருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு பெட்டதஹலசூரில் வெறிச்சோடிய பகுதியில், கடந்த 30ம் தேதி பெண் ஒருவர் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்தார்.
சிக்கஜாலா போலீசாரின் விசாரணையில் அவர் நைஜீரியாவை சேர்ந்தவர் என்பது தெரிந்தது.
ஆனால் அவரது பெயர், எங்கு வசித்தார் என்பது பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.
இறந்து கிடந்த பெண்ணின் புகைப்படத்தை, பெங்களூரில் வசிக்கும் நைஜீரிய நாட்டுகாரர்களிடம் காண்பித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் லோவேத், 30 என்பதும், ஆறு மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் பெங்களூரு வந்ததும், பன்னர்கட்டாவில் நண்பர்கள் இருவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததும் தெரிந்தது.
பன்னர்கட்டாவில் கொலை செய்து, உடலை பெட்டதஹலசூரில் வீசி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால், நண்பர்கள் இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.