தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நீரில் மூழ்கி 2 சிறுமியர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி 2 சிறுமியர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி 2 சிறுமியர் உயிரிழப்பு


UPDATED : அக் 27, 2026 12:00 AM

ADDED : அக் 26, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:00 AM ADDED : அக் 26, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுப்பி: ஏரியில் துணி துவைக்க சென்ற, இரண்டு சிறுமியர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உடுப்பி மாவட்டம், குந்தாபுரா அருகில் உள்ள ஹோசாடு கிராமத்தில் பல குடும்பங்கள், குடிசை போட்டு வசிக்கின்றன. இக்கிராமத்தைச் சேர்ந்த ஐந்து சிறுமியர், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில் துணி துவைப்பதற்காக, குப்பரிகேவில் உள்ள ஏரிக்கு சென்றிருந்தனர்.

ஏரிக்கரையில் துணியை துவைக்கும் போது, சுனிதா, 13, வைஷாலி, 13 ஆகிய இரண்டு சிறுமியர் கால் தவறி நீரில் விழுந்து மூழ்கினர். இதை கண்டு பீதியடைந்த மற்ற சிறுமியர், கிராமத்துக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறினர். கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த கங்கொல்லி போலீசார், நீச்சல் வீரர்களின் உதவியுடன் இரண்டு சிறுமியரின் உடல்களை மீட்டனர். இந்த சிறுமியர் கிராமத்தின் அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us