/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓட்டு திருட்டுக்கு எதிராக 2 லட்சம் கையெழுத்து
/
ஓட்டு திருட்டுக்கு எதிராக 2 லட்சம் கையெழுத்து
ADDED : அக் 21, 2025 04:22 AM

பெங்களூரு: ஓட்டு திருட்டு தொடர்பாக, பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் நடத்தி வரும் விழிப்புணர்வை முன்னிட்டு, தங்களின் மாவட்டத்தில், குறைந்த பட்சம் இரண்டு லட்சம் கையெழுத்துகள் சேகரிக்க வேண்டும் என, அமைச்சர்களுக்கு, மாநில காங்கிரஸ் தலைவருமான, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சமீபத்தில் டில்லியில் ஊடகத்தினர் சந்திப்பு நடத்தி, பா.ஜ., மீது ஓட்டுகளை திருடியதாக குற்றம்சாட்டினார். ஓட்டு திருட்டுக்கு எதிராக, கையெழுத்து வேட்டை நடத்தும்படி, காங்கிரஸ் மேலி டம் கட்டளையிட் டுள்ளது. இதன் படி அவரவர் தொகுதி அல்லது மாவட்டத்தில், தலா இரண்டு லட்சம் மக்களின் கையெழுத்தை சேகரிக்கும்படி, அனைத்து அமைச்சர் களுக்கும், துணை முதல்வர் சிவகுமார் உத்தர விட்டுள்ளார்.
இது குறித்து, அவர் எழுதிய கடிதம்:
மாவட்ட காங்கிரஸ் அல்லது பிளாக் காங்கிரஸ் மூலமாக, நடக்கும் கையெழுத்து சேகரிப்பை தவிர, அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில், இரண்டு லட்சம் கையெழுத்து சேகரிக்க வேண்டும். இது குறித்து, காங்கிரஸ் தேசிய பொது செயலர் வேணுகோபால், கட்சி பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உத்தரவிட்டுள்ளனர்.
அனைத்து அமைச்சர்களும், அவரவர் தொகுதிகள், மாவட்டங்களில் இரண்டு லட்சம் கையெழுத்துகளை சேகரித்து, இம்மாதம் 24ம் தேதிக்குள், மாநில காங்கிரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.