/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பூச்சிக்கொல்லி மருந்து தவறுதலாக குடித்த 2 பேர் உயிரிழப்பு
/
பூச்சிக்கொல்லி மருந்து தவறுதலாக குடித்த 2 பேர் உயிரிழப்பு
பூச்சிக்கொல்லி மருந்து தவறுதலாக குடித்த 2 பேர் உயிரிழப்பு
பூச்சிக்கொல்லி மருந்து தவறுதலாக குடித்த 2 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 17, 2025 08:12 AM
கோலார் :கோழிப்பண்ணையில் தண்ணீர் என நினைத்து, பூச்சிக்கொல்லி மருந்து குடித்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கோலார் மாவட்டம், சீனிவாசபுராவின், ராயல்நாடு கிராமத்தில் வசித்தவர்கள் தேவப்பா, 60, தாசப்பா, 62. இவர்கள் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றினர். நேற்று மதியம் உரத்தை கோணிப்பைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
தாகமாக இருந்ததால், குடிக்க நீர் தேடினர். பாட்டிலில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை, தண்ணீர் என நினைத்து குடித்தனர். விஷத்தன்மை பாதிக்கப்பட்டு, துடிதுடித்தனர்.
இதை கண்ட அப்பகுதியினர், இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர்.