/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்த சம்பவம்; சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட்

ADDED : டிச 17, 2025 06:03 AM
ஹாவேரி: அரசு பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தில், அவரை தாக்கியவர்களை தடுக்க தவறிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஹாவேரி மாவட்டம் சாவனுாரில் அரசு பள்ளி உள்ளது. இங்கு கடந்த, 10ம் தேதி, பெற்றோரும், உள்ளூர்வாசிகளும் நுழைந்து, அங்கிருந்த ஆங்கில பாடா ஆசிரியர் ஜெகதீசை, தங்கள் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அத்துடன், அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
சாவனுார் போலீஸ் நிலையம் சென்ற போது கோபமடைந்த சிலர், ஜெகதீசை மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க வேண்டிய போலீசார் அமைதியாக இருந்தனர். ஜெகதீஷ் மீது போக்சோ வழக்கு பதிவானது.
அதேவேளையில், தன்னை தாக்கிய, 22 பேர் மீது ஜெகதீஷ் புகார் அளித்து உள்ளார். அதுவும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியரை அடித்து செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றதை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்பினரும் கண்டித்து, பந்த்க்கு அழைப்பு விடுத்திருந்தனர். நேற்று முன்தினம் நடந்த பந்த்திற்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஜி.பி., ரவிகாந்தே கவுடா, எஸ்.பி., யசோதாவிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், சாவனுார் போலீஸ் நிலைய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தேவானந்த், தலைமை ஏட்டு மல்லிகார்ஜுன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.