/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.1.60 கோடி தங்க கட்டிகள் 'ஆட்டை' போட்ட 2 பேர்
/
ரூ.1.60 கோடி தங்க கட்டிகள் 'ஆட்டை' போட்ட 2 பேர்
ADDED : நவ 12, 2025 06:36 AM

ஹலசூரு கேட்: பெங்களூரு, நகரத்பேட்டில் வசிப்பவர் ஹர்ஷித்; நகை கடை வைத்துள்ளார். இவருக்கு, ராஜேந்திர குமார், 54, ஜீவன் சகாரியா, 32, ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.
'எங்களுக்கு பெரிய ஜுவல்லரி கடையின் உரிமையாளர்களை தெரியும். உங்கள் கடையில் உள்ள தங்க கட்டிகளை அதிக விலைக்கு விற்றுத் தருகிறோம்' என, ஹர்ஷித்திடம், இருவரும் கூறினர். இதை நம்பிய ஹர்ஷித்தும், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை 1 கிலோ 300 கிராம் எடையுள்ள, தங்கக்கட்டிகளை கொடுத்தார்.
இருவரும் தங்கக் கட்டிகளை விற்காமலும், திரும்ப தராமலும் ஏமாற்றினர்.
இருவர் மீது ஹலசூரு கேட் போலீசில் ஹர்ஷித் புகார் செய்தார். இருவரையும் நேற்று முன்தினம் சேஷாத்ரிபுரத்தில் போலீசார் கைது செய்தனர். 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன.

