தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குளத்து நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

 குளத்து நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

 குளத்து நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


ADDED : மார் 12, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: குளத்தி ல் குளிக்க சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஹூப்பள்ளி மாவட்டத்தின், பைரிதேவரகொப்பா கிராமத்தின், ரேணுகா நகரில் வசித்தவர்கள் சமர்த், 17, மற்றும் ஹரீஷ், 17. அக்கம், பக்கத்து வீடுகளில் வசிப்பதால், இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர்.

கோபனகொப்பா அருகில் உள்ள, அரசு பி.யு., கல்லுாரியில், காமர்ஸ் பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கின்றனர்.

இவர்களுக்கு தேர்வு முடிந்ததால், விடுமுறையில் வீட்டில் இருந்தனர். நேற்று மதியம் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்ததால், கிராமத்தில் இருந்த விவசாய குளத்தில் நீச்சலடிக்க சென்றனர்.

இவர்களுக்கு சரியாக நீந்த தெரியாது. ஆழமான இடத்துக்கு நீந்த முற்பட்டதால், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மதியம் வீட்டை விட்டு சென்றவர்கள், மாலையாகியும் வீடு திரும்பாத காரணத்தால், பெற்றோர் தேட துவங்கினர்.

அப்போது மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்ததை கண்ட சிலர், மாணவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த நவநகர் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியு டன், மாணவர்களின் உடல்களை மீட்டனர். இது குறித்து, விசாரணை நடத்துகின்றனர்.

தற்கொலை பெலகாவி மாவட்டத்தின், முத்தியாளா கிராமத்தில் வசித்தவர் விநோத் பீமப்பா திகடி, 31. இவர் பெலகாவியின், ஹிண்டல்கா சிறையில் வார்டனாக பணியாற்றினார். சமீபத்தில் இவர் புதிதாக வீடு கட்டினார்.

இவருக்கு திருமணம் செய்ய, பெற்றோர் பல இடங்களில் பெண் தேடினர். ஆனால் எவ்வளவு முயற்சித்தும், பெண் அமையவில்லை.

இதனால் விரக்தி அடைந்த விநோத், நேற்று காலை மல்லப்பிரபா ஆற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us