ADDED : ஏப் 14, 2026 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலார்: ஏரியில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்த இரு பெண்கள் உயிரிழந்தனர்.
கோலார் அரஹள்ளியின் நிசார் நகரை சேர்ந்தவர் மொஹம்மதி, 25. இவரின் வீட்டுக்கு பெங்களூரை சேர்ந்த சல்மா, 26, என்பவர் வந்திருந்தார். நேற்று காலை துணி துவைக்க அரஹள்ளி ஏரிக்கு குழந்தைகளுடன் இருவரும் சென்றிருந்தனர். அப்போது குழந்தைகள் தண்ணீரில் விழுந்ததை பார்த்த இருவரும், அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். குழந்தைகளை காப்பாற்றிய இருவரும், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், இருவரின் உடல்களை மீட்டனர்.

