/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மண் சரிந்து 2 தொழிலாளர் உயிரிழப்பு
/
மண் சரிந்து 2 தொழிலாளர் உயிரிழப்பு
ADDED : ஏப் 17, 2025 01:22 AM
பெலகாவி, ஏப். 17-
பைப் லைன் அமைக்கும் பணிகள் நடந்த போது, மண் சரிந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பெலகாவி நகரின், புதிய காந்தி நகரில் கர்நாடக குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் துறை சார்பில், குடிநீர் வினியோகிக்க, பைப்லைன் பொருத்தும் பணிகள் நடக்கின்றன. பை ரிசார்ட் பின்புற சாலையில், பைப்லைன் பொருத்த மண்ணை ஆழமாக தோண்டுவதில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பசவராஜ் சரவி, 38, சிவலிங்க சரவி, 20, உள்ளே இறங்கி மண்ணை அள்ளும் போது, எதிர்பாராமல் மண் சரிந்து விழுந்தது. இருவரும் உள்ளே சிக்கி கொண்டனர். சக தொழிலாளர்களும், அப்பகுதியினரும் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, மண்ணை அள்ளி இரண்டு தொழிலாளர்களையும் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தனர்.
மாளமாருதி போலீசார் விசாரிக்கின்றனர்.