/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரசாயன தொட்டி சுத்தம் செய்த தொழிலாளர்கள் 2 பேர் பலி
/
ரசாயன தொட்டி சுத்தம் செய்த தொழிலாளர்கள் 2 பேர் பலி
ரசாயன தொட்டி சுத்தம் செய்த தொழிலாளர்கள் 2 பேர் பலி
ரசாயன தொட்டி சுத்தம் செய்த தொழிலாளர்கள் 2 பேர் பலி
ADDED : மே 21, 2025 11:10 PM
துமகூரு: தொழிற்சாலையில் ரசாயனம் சேகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்யும் போது, இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
துமகூரு நகரின் புறநகர் பகுதியில், வசந்த நரசாபுரா தொழிற் பகுதியில் ரசாயனம் தயாரிக்கும், 'லாரஸ் பயோ' என்ற தொழிற்சாலை உள்ளது. நேற்று மதியம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நான்கு பேர், ரசாயனம் சேகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்வதற்காக, உள்ளே இறங்கினர்.
சுத்தம் செய்யும் போது, ரசாயன நெடியால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் நால்வரும் மயக்கம் அடைந்தனர். இதை பார்த்த சக தொழிலாளர்கள், தொட்டியில் இருந்து நால்வரையும், மேலே கொண்டு வந்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவர்களில் பிரதாப், 23, வெங்கடேஷ், 32, வழியிலேயே உயிரிழந்தனர்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மஞ்சண்ணா, 42, யுவராஜ், 32, சிகிச்சை பெறுகின்றனர். சம்பவத்தில் உயிரிழந்த பிரதாப், மதுகிரி தாலுகாவின், மாகோடு கிராமத்தை சேர்ந்தவர். வெங்கடேஷ், சிரா தாலுகாவின், தரூர் கிராமத்தை சேர்ந்தவர்.
பணியாற்றும் போது, பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தாததே, சம்பவத்துக்கு காரணம் என, கூறப்படுகிறது.
துமகூரு ஊரக போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.