தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாடியில் இருந்து தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி

 மாடியில் இருந்து தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி

 மாடியில் இருந்து தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி


ADDED : ஜூன் 18, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாதநாயக்கனஹள்ளி: பெங்களூரு டி.தாசரஹள்ளியில் வசிப்பவர் நவீன்குமார். இவர் தனது மனைவி காவ்யா, 2 வயது மகன் தீக் ஷித்துடன், இரண்டு நாட்களுக்கு முன், தொட்டதகுட்டஹள்ளியில் வசிக்கும் உறவினர் வீட்டிற் கு சென்றிருந்தார்.

நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வீட்டின் முதல் மாடியில் விளையாடி கொண்டிருந்த தீக் ஷித், எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தீக் ஷித்தை தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு, குழந்தை கோமாவுக்கு சென்றது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை தீக் ஷித் இறந்தார்.

மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us