தொண்டையில் நெல்லிக்காய் சிக்கி 2 வயது குழந்தை பலி
தொண்டையில் நெல்லிக்காய் சிக்கி 2 வயது குழந்தை பலி
ADDED : மே 18, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
கோலார்: நெல்லிக்காய் தொண்டையில் சிக்கியதால், இரண்டு வயது ஆண் குழந்தை இறந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கோலார் மாவட்டம் மாலுார் தாலுகாவில் வசிப்பவர் ரவி. இவரது மனைவி மாலா. தம்பதிக்கு 2 வயதில், விஜயேந்திரா என்ற மகன் இருந்தார். தம்பதி கீரை விற்று வாழ்க்கை நடத்துகின்றனர். தாய் மாலா, ஜூஸ் செய்வதற்காக மலை நெல்லிக்காயை வீட்டுக்கு கொண்டு வந்து வைத்திருந்தார்.
குழந்தை விஜயேந்திரா, நேற்று காலை 10:30 மணியளவில், விளையாடும் போது நெல்லிக்காயை எடுத்து, வாயில் போட்டு விழுங்கினார். இது தொண்டையில் சிக்கிக்கொண்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை பார்த்த பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கூடுதல் சிகிச்சைக்காக தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் குழந்தை உயிரிழந்தது.
