தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி மீட்பு

 கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி மீட்பு

 கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி மீட்பு


ADDED : மார் 17, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்தர கன்னடா: உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி தாலுகா கஸ்துாரிபா நகரை சேர்ந்த இரண்டு வயது சிறுமி பூவி. நேற்று காலை வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டுக்குள் வரவில்லை என்பதை அறிந்த அவரின் பாட்டி, பல இடங்களில் தேடினார்.

கடைசியாக வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் அருகே சென்றார். அப்போது, கிணற்றில் இருந்து அழுகுரல் கேட்டது. எட்டிப்பார்த்த போது, கிணற்றில் பைப்பை பிடித்தபடி பூவி அழுது கொண்டிருந்தார்.

அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சல் போட்டார். இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த பயாஸ் சவுதி, கிணற்றுக்குள் இறங்கி, அண்டை வீட்டினர் உதவியுடன் கயிற்றை தன் இடிப்பில் கட்டிக் கொண்டு, சிறுமியை ஒரு கையில் பிடித்தபடி மேலே துாக்கி வந்தார். சிறுமியை காப்பாற்றிய பயாஸ் சவுதியை பலரும் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us