ADDED : ஏப் 20, 2026 02:15 AM
தட்சிண கன்னடா: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகா கடிருத்யநாவர் கிராமத்தை சேர்ந்தவர் சுமந்த், 28. இவர் அதே கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலித்து வந்தார்.
சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரை நம்பவைத்து கடந்த 16ம் தேதி ஊரின் வெளிப்புறத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார்.
அப்போது, சுமந்த் அவரது நண்பர் நவ்நீத், 26, உடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து, சிறுமி தன் பெற்றோரிடம் கடந்த 17ம் தேதி கூறினார்.
அவரது பெற்றோர் தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 'போக்சோ' வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுமந்த், நவ்நீத் இருவரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். சுமந்திருக்கு மே 10ம் தேதி வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
