/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தண்டவாளத்தில் விழுந்த 20 இரும்பு பிளேட்கள்
/
தண்டவாளத்தில் விழுந்த 20 இரும்பு பிளேட்கள்
ADDED : ஏப் 29, 2025 06:16 AM

பல்லாரி: லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையால், லாரியில் இருந்து 20 இரும்பு பிளேட்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்தன.
பல்லாரி மாவட்டம், ஹலஹூந்தி கிராமம் அருகில் ரயில் பாதை உள்ளது. நேற்று இவ்வழியாக இரும்புப் பொருட்களை ஏற்றிக் கொண்டு பெங்களூருக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
ரயில் தண்டவாளத்தை வேகமாக கடந்தபோது, லாரியில் இருந்த 20க்கும் மேற்பட்ட இரும்பு பிளேட்கள் தண்டவாளத்தில் விழுந்தன. இதை பார்த்த பிற வாகன ஓட்டிகள், அப்பகுதியினர், லாரி ஓட்டுநரை நிறுத்தினர்.
பின், தண்டவாளத்தில் விழுந்திருந்த இரும்பு பிளேட்களை அகற்றினர். இந்நேரத்தில் ரயில் வந்திருந்தால், பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.
கீழே விழுந்த இரும்பு பிளேட்கள் மீண்டும் லாரியில் ஏற்றப்பட்டன. 'வேகமாக செல்ல வேண்டாம்' என அப்பகுதியினர், ஓட்டுநருக்கு அறிவுரை கூறி, அனுப்பி வைத்தனர்.