/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.ஜி.மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு 'சீல்'
/
எம்.ஜி.மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு 'சீல்'
எம்.ஜி.மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு 'சீல்'
எம்.ஜி.மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 22, 2026 05:27 AM
தங்கவயல்: சமீபத்தில் தங்கவயலுக்கு வந்த, நகராட்சி துறை அமைச்சர் ரஹீம்கான், நகரின் வளர்ச்சி மற்றும் வருவாய் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ராபர்ட்சன் பேட்டையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான எம்.ஜி.மார்க்கெட்டில், 4 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி உள்ளது. அதனை வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது உத்தரவின்படி, தங்கவயல் நகராட்சி ஆணையர் ஸ்ரீதர் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் முதற்கட்டமாக, 20 கடைகளுக்கு நேற்று சீல் வைத்தனர்.
அடுத்த கட்டமாக ஆண்டர்சன் பேட்டை மார்க்கெட் கடைகள் மீதும், நடவடிக்கை எடுக்க போவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.