ADDED : மார் 28, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
சுகாதாரம் மாநகராட்சியில் தற்போது 3,464 துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவர். அவர்களுக்கு அதிகாரபூர்வ அடையாள அட்டை, விரிவான மருத்துவ காப்பீடு வசதி செய்து கொடுக்கப்படும்.
முக்கிய சாலைகளை சுத்தம் செய்யும் நோக்கில், துப்புரவு இயந்திர வாகனம் வாங்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பெண்களுக்காக 20 பிரத்யேக கழிப்பறைகள், ஆண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 60 புதிய கழிப்பறை கட்டப்படும். பழைய கழிப்பறைகள் மேம்படுத்தப்படும்.
குப்பை சேகரிப்பு, குப்பை பிரித்தெடுக்கும் பணியை செய்யும் திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு 215 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
