/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
20 வாகனங்களின் கண்ணாடி வாளால் அடித்து உடைப்பு
/
20 வாகனங்களின் கண்ணாடி வாளால் அடித்து உடைப்பு
ADDED : செப் 27, 2025 04:58 AM
பேடரஹள்ளி: வாளால் அடித்து 20 வாகனங்களின் கண்ணாடியை உடைத்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு, பேடரஹள்ளி வால்மீகி நகரில் வசிப்பவர்கள், தங்கள் வாகனங்களை தினமும் இரவு வீட்டின் முன், சாலையோரத்தில் நிறுத்துவது வழக்கம்.
நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, வால்மீகி நகருக்கு ஆட்டோவில் வந்த நான்கு பேர், தங்கள் கையில் வைத்திருந்த வாளால் அடித்து, கார், ஆட்டோ, சரக்கு ஆட்டோ என, 20 வாகனங்களின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினர். நேற்று காலையில் இதை பார்த்த வாகனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பேடரஹள்ளி போலீசில் புகார் செய்தனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, நான்கு பேர் நடத்திய அட்டகாசம் தெரிய வந்தது.
இதுபோல மாகடி சாலை அன்னபூர்னேஸ்வரி நகரில், நேற்று முன்தினம் நள்ளிரவு சாலையோரம் நின்ற, லாரியின் கண்ணாடியை வாளால் அடித்து உடைத்த கும்பல், லாரிக்குள் துாங்கிக் கொண்டிருந்த டிரைவர் வெங்கடேஷ் கையில் வாளில் தாக்கி, அவரிடம் இருந்து மொபைல் போன், 5,000 ரூபாய் ரொக்கத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றது.
இந்த இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இரு வழக்கிலும் தொடர்புடையவர்களை போலீசார் தேடிவருகின் றனர்.