/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
15 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'
/
15 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'
ADDED : ஜூலை 20, 2025 09:42 PM
உடுப்பி : உடுப்பி மாவட்டம், காபு தாலுகாவில் 15 வயது சிறுமி தன் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது அண்ணனின் நண்பர் மஞ்சுநாத், 25. இவர் சிறுமியை காதலிப்பதாக கூறி, பின்னால் சுற்றினார். சிறுமிக்கு விருப்பம் இல்லை என்றாலும் கட்டாயப்படுத்தினார்.
கதக், ரோணாவில் சிறுமியின் பாட்டி வீடு உள்ளது. 2023ல் சிறுமி தன் பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு சென்ற மஞ்சுநாத், சிறுமியை பலவந்தமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு, இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவில் பதிவு செய்தார்.
இவ்விஷயத்தை யாரிடமாவது கூறினால், வீடியோவை சிறுமியின் அண்ணனுக்கும், குடும்பத்தினருக்கும் அனுப்புவதாக மிரட்டினார்.
சிறுமி, தன் தாயிடம் கூறினார். அவரது தாயும், கார்கலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மஞ்சுநாத்தை கைது செய்தனர். விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் மஞ்சுநாத்தின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சீனிவாஸ் சுவர்ணா நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 1.50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி உத்தரவிட்டார்.