/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு '20 ஆண்டு'
/
சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு '20 ஆண்டு'
ADDED : ஜூலை 09, 2025 01:01 AM
கொப்பால்: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கொப்பால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
துமகூரு மாவட்டத்தின் பீரனகல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 22. இவருக்கு கொப்பால் நகரில் வசிக்கும் 16 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமானார். அவரது மொபைல் போன் எண்ணை பெற்று, தினமும் பேசி நெருக்கமானார். இது காதலாக மாறியது.
கடந்த 2023 அக்டோபரில், சிறுமியின் பெற்றோர் பணிக்கு சென்றிருந்தபோது, ரமேஷ் அங்கு சென்றார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியை பலாத்காரம் செய்தார்.
இந்த விஷயத்தை சிறுமி, பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், கொப்பால் நகர மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர். விசாரணையை முடித்து, கொப்பால் நகரின் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் ரமேஷின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி குமார், நேற்று தீர்ப்பளித்தார்.