தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

 சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

 சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


ADDED : ஜன 25, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: தாவணகெரேயை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று, தன் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தாவணகெரேயை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 2022 டிச., 18 ல் பள்ளிக்கு சென்றவர், மாலையாகியும் வீடு திரும்பவில்லை. அச்சமடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் மகளை காணவில்லை. தாவணகெரே போலீசில் மகள் காணவில்லை என்று புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரித்து வந்தனர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர், 22, சிறுமியை காதலிக்கும்படி தொந்தரவு செய்தது தெரிந்தது. இதையடுத்து சந்திரசேகர் குறித்து போலீசார் விசாரித்தனர். கோலாரின் பைரத்னஹள்ளியில் சிறுமியும், சந்திரசேகரும் இருப்பதை போலீசார் உறுதிபடுத்தினர். அங்கு சென்ற அவர்கள், சந்திரசேகரை கைது செய்து, சிறுமியை மீட்டனர்.

சிறுமியிடம் நடத்திய விசாரணையில், 'சந்திரசேகர், தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தினார். சம்பவ தினத்தன்று தன்னை வலுக்கட்டாயமாக, பெங்களூரு அழைத்து சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார்' என தெரிவித்தார்.

இதையடுத்து சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்திரசேகருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us