தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுமி பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

 சிறுமி பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

 சிறுமி பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை


ADDED : பிப் 21, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, கோலார் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முல்பாகலின் மஸ்டூர் கிராமத்தை சேர்ந்த சந்தீப், 21. இவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர், நங்கிலி போலீஸ் நிலையத்தில்

2024 ஆகஸ்ட், 28ம் தேதி புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நங்கிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.ஜி.சதீஷ், கோலார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்.

விசாரணையில் குற்றம் நடந்தது நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி கே.பி.பிரசாத், குற்றவாளியான சந்தீப்புக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us