/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காரில் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல்
/
காரில் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : செப் 18, 2025 07:52 AM

பெங்களூரு : போலீசாரை பார்த்து நிற்காமல் சென்ற காரை விரட்டிச் சென்று பிடித்தனர். அதில் இருந்த 21 கிலோ கஞ்சா, 3 லட்சம் ரொக்கம், 11 பவுன் தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு, வீரபத்ர சிக்னல் அருகே நேற்று முன்தினம் மாலை பனசங்கரி போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த காரை சோதனையிட நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் கார் நிற்காமல் சென்றது.
உடனடியாக கிரிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், அந்த காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்து இருவர் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். கார் டிரைவர் நயீம் அகமது பிடிபட்டார்.
காரை சோதனை செய்ததில், 21 கிலோ கஞ்சா, 2.89 லட்சம் ரூபாய் ரொக்கம், 88 கிராம் தங்க நகைகள், 5 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து பெங்களூரு தெற்கு பிரிவு டி.சி.பி., லோகேஷ் பி.ஜகலசர் கூறியதாவது:
காரில் இருந்த கஞ்சா, பணம், மொபைல் போன்களை கிரிநகர் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓட்டுநர் நயீம் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் கிரிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.