தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 21 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது

 21 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது

 21 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது


ADDED : ஏப் 13, 2026 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயபுரா: மஹாராஷ்டிராவின் வாகோளி கிராமத்தை சேர்ந்த ஆஜான் மஜாபர், 50, என்பவரை சைபர் குற்ற வழக்கில், 2005ல் விஜயபுரா போலீசார் கைது செய்திருந்தனர். இவரது குற்றம் உறுதியானதால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விஜயபுரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 2005ன் மார்ச் 25ல், பத்து நாட்கள் பரோல் பெற்று, சொந்த கிராமத்துக்கு சென்றார். பரோல் முடிந்த பின்னும், அவர் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவானார். 21 ஆண்டுகளாக தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.

இவரை கைது செய்ய விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி, தனிப்படை அமைத்தார். தனிப்படையினர் மஹாராஷ்டிராவுக்கு சென்று தேடினர்.

இச்சலகரஞ்சி கிராமத்தில் நேற்று முன் தினம், ஆஜான் மஜாவரை கைது செய்தனர். அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விஜயபுரா மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us