மாலுாரில் 'சிக்னல்' பராமரிப்பு 22 ரயில்கள் ரத்து பயணியர் கடும் அவதி
மாலுாரில் 'சிக்னல்' பராமரிப்பு 22 ரயில்கள் ரத்து பயணியர் கடும் அவதி
ADDED : ஆக 19, 2026 03:05 AM
அ நிறம் | அளவு
தங்கவயல்: மாலுார் ரயில் நிலையத்தில் 'சிக்னல்' பராமரிப்பு பணிகள் நேற்று நடந்ததால், 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பயணியர் கடும் அவதியடைந்தனர்.
தங்கவயல் மாரி குப்பத்தில் இருந்து கிருஷ்ணராஜபுரம், கே.எஸ்.ஆர்., பெங்களூரு செல்லும் அனைத்து மெமு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால், தங்கவயலில் இருந்து சென்ற பயணியர் கடும் அவதிப்பட்டனர். அதிவிரைவு ரயில்களில் பயணிக்க பங்கார்பேட்டையில் பயணியர் அலை மோதினர். கூட்ட நெரிசலில் சிக்கி, பாதிக்க விரும்பாத ஏராளமான பயணியர் பங்கார்பேட்டையில் இருந்து தங்கவயலுக்கு திரும்பினர்.
தங்கவயலில் இருந்து பெங்களுருக்கு செல்லும் பயணியர், 'இது போன்ற நெரிசலை இதுவரை கண்டதே இல்லை' என்று தெரிவித்தனர்.
