தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெட்டிக்கடைகளில் சோதனை 45 லிட்டர் மதுபானம் பறிமுதல்

 பெட்டிக்கடைகளில் சோதனை 45 லிட்டர் மதுபானம் பறிமுதல்

 பெட்டிக்கடைகளில் சோதனை 45 லிட்டர் மதுபானம் பறிமுதல்


ADDED : ஆக 19, 2026 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 02:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் கிராமப் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை, சூதாட்டம், இறைச்சிக்காக பசுக்கள் கடத்தல் குறித்து கிடைத்த தகவலின் படி, கேசம்பள்ளி, பேத்தமங்களா ஆகிய இரு போலீஸ் நிலைய பகுதிகளில் அதிரடி சோதனை நடந்தது.

கேசம்பள்ளியில் ஜெயராம், 50, என்பவரின் மளிகை கடையில், சட்டவிரோதமாக, 17 லிட்டர் மதுபானம்; பில்லேரஹள்ளியில் நாகராஜ், 48, என்பவர் பெட்டிக்கடையில், 5 லிட்டர் மதுபானம். பேத்தமங்களா போலீஸ் நிலைய எல்லைக்குள், சட்ட விரோதமாக தாத்தேனஹள்ளி கிராமத்தில் சந்திரபாபு, 52, என்பவரின் பெட்டிக் கடையில் வைத்திருந்த 23 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

பசுக்கள் மீட்பு ஆந்திர மாநிலம் பலமனேரிலிருந்து, பெங்களூருக்கு சட்ட விரோதமாக பசுக்கள் கடத்தப்பட்டன. பட்ரஹள்ளி அருகே வாகனங்களை நிறுத்தி நடத்திய சோதனையில், 18 பசுக்கள் மீட்கப்பட்டன். அவை, கோ சாலையில் ஒப்படைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us