தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடகாவின் 15 மாவட்டங்களில் 23 ஆயிரம் முன்னாள் தேவதாசிகள்

 கர்நாடகாவின் 15 மாவட்டங்களில் 23 ஆயிரம் முன்னாள் தேவதாசிகள்

 கர்நாடகாவின் 15 மாவட்டங்களில் 23 ஆயிரம் முன்னாள் தேவதாசிகள்


ADDED : பிப் 12, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் 15 மாவட்டங்களில் 23,395 முன்னாள் தேவதாசிகள் இருப்பது சர்வேயில் தெரிய வந்து உள்ளது.

கர்நாடகாவில் முன்னாள் தேவதாசிகள் எத்தனை பேர் இருக்கின்றனர். அவர்களின் மறுவாழ்க்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை அறிவதற்காக 'சர்வே' எடுக்கப்பட்டது. இதை கர்நாடக மாநில மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு துறை இணைந்து நடத்தியது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை நடந்தது.

விஜயபுரா, பாகல்கோட், ராய்ச்சூர், கொப்பால், தார்வாட், ஹாவேரி, கதக், கலபுரகி, யாத்கிர், சித்ரதுர்கா, தாவணகெரே, ஷிவமொக்கா, பல்லாரி, விஜயநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் சர்வே நடத்தப்பட்டது.

இதில், 23,395 முன்னாள் தேவதாசிகள் இருப்பது கண்டறியப்பட்டது.இவர்களில் பெரும்பாலானோர் பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களே. இது தொடர்பான அறிக்கையை முதல்வர் சித்தராமையாவிடம், குழந்தை, பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் சமர்ப்பித்தார்.

தே வதாசி முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நிதியுதவி, போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள், உதவித்தொகை போன்றவை வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இவர்களின் மறுவாழ்வை ஆதரிக்கும் வகையில், பல அரசு திட்டங்களின் கீழ் சுகாதார வசதிகள் வழங்குதல், சுயசார்பு வாழ்க்கை நடத்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் போன்றவை பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us