அதிக விலைக்கு ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 24 பேர் கைது
அதிக விலைக்கு ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 24 பேர் கைது
ADDED : ஏப் 29, 2026 01:10 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரு சென்ட்ரல் டி.சி.பி., அக் ஷய் கூறியதாவது:
ஐ.பி.எல்., டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து, கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் 16; ஹலசூரு கேட் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு என மொத்தம், 17 வழக்குகள் பதிவாகின. இவ்வழக்குகள் தொடர்பாக, இதுவரை, 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களிடமிருந்து, 37 ஐ.பி.எல்., டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்தனர். கைது நடவடிக்கை மூலம் கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
