தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 25 சதவீதம் சமையல் காஸ் சிலிண்டர்களில்  எடை குறைவு!: உணவு வினியோகத்துறை சோதனையில் 'திடுக்'

25 சதவீதம் சமையல் காஸ் சிலிண்டர்களில்  எடை குறைவு!: உணவு வினியோகத்துறை சோதனையில் 'திடுக்'

25 சதவீதம் சமையல் காஸ் சிலிண்டர்களில்  எடை குறைவு!: உணவு வினியோகத்துறை சோதனையில் 'திடுக்'


ADDED : செப் 30, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு வீட்டு உபயோக சிலிண்டரின் எடை 14.2 கிலோ முதல், 15.8 கிலோ வரை இருக்கும். எரிவாயு நிரப்பிய பின், அதன் எடை 29.5 கிலோ முதல் 30 கிலோ வரை இருக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில், 1.88 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் எல்.பி.ஜி., சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். இந்தியாவில் அதிக எரிவாயு இணைப்புகளை கொண்ட மாநிலங்களில், கர்நாடகா ஆறாவது இடத்தில் உள்ளது.

மத்திய அரசால் வழங்கப்படும், 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ் மட்டும், 37 லட்சத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் இலவச எரிவாயு இணைப்பை பெற்றுள்ளனர்.

மாநிலம் முழுதும் தினமும் நான்கு லட்சம் எல்.பி.ஜி., சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

ஆனால், கர்நாடகாவில் எல்.பி.ஜி., சிலிண்டர்களின் எடை குறைந்து இருப்பதாக, உணவு பொது வினியோக துறைக்கு பல புகார்கள் சென்றன.

இதையடுத்து, துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் உத்தரவின்படி, பொது வினியோக துறைக்கு உட்பட்ட சட்ட அளவியல் துறை அதிகாரிகள், 'மிஷன் நிஹாரா' என்ற பெயரில் மாநிலம் உள்ள 17 எல்.பி.ஜி., சிலிண்டர் நிரப்பும் மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

பி.பி.சி.எல்., - எச்.பி.சி.எல்., - ஐ.ஓ.சி.எஸ்., நிறுவனங்களில் தலா நான்கு மையங்களும், டோட்டல் எனர்ஜீஸ் நிறுவனத்தின் இரண்டு மையங்களும், 3 தனியார் பாட்டிலிங் மையம் என 17 எல்.பி.ஜி., மையங்களில் 1,530 சிலிண்டர்களை ஆய்வு செய்தனர். இதில், 1,148 சிலிண்டர்களில், 943 சிலிண்டர்களில் 61.6 சதவீதம் அறிவிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும்; 205 சிலிண்டர்களில் 13.4 சதவீதம் சரியான அளவு இருப்பதும் தெரிய வந்தது.

அதே நேரத்தில், 382 சிலிண்டர்களில், அறிவிக்கப்பட்ட அளவை விட, 25 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனாலும், இவை பரிந்துரைக்கப்பட்ட அளவில் இருப்பதாக பதிவு செய்து உள்ளனர். அதாவது, நான்கில் ஒரு சிலிண்டரில் எரிவாயு குறைவாக உள்ளது.

எடை குறைவாக எரிவாயு சிலிண்டர் நிரப்பிய மூன்று மையங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 79 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் கூறியதாவது:

எல்.பி.ஜி., சிலிண்டர் வினியோகிக்கும் போது, அதை எடை போட கோரும் உரிமை ஒவ்வொரு நுகர்வோருக்கும் உள்ளது. நுகர்வோர் தங்கள் உரிமையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

சிலிண்டர் வினியோகஸ்தர்கள், டெலிவரி செய்யும் போது, எடை பார்க்கும் கருவியை வைத்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. எனவே, வாடிக்கையாளர்கள் தாங்கள் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்போது, அதன் எடையை சரிபார்த்து வாங்க வேண்டும்.

எடை குறைவாக இருந்தால், வாங்குவதை தவிர்த்து, நுகர்வோர் குறை தீர்ப்பு எண்ணான 1800 599 1100 ல் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us