/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனியார் பஸ்சில் தீ 25 பயணியர் தப்பினர்
/
தனியார் பஸ்சில் தீ 25 பயணியர் தப்பினர்
ADDED : ஏப் 27, 2025 05:43 AM

மாண்டியா : மாண்டியாவில் ஓடிக் கொண்டிருந்த தனியார் பஸ்சில் தீப்பிடித்தது. 25 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மங்களூரில் இருந்து பெங்களூருக்கு நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, 25 பயணியருடன் 'ரேஷ்மா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' பஸ் புறப்பட்டது.
மாண்டியா மாவட்டம், நாகமங்களாவின் கடபஹள்ளி கிராமம் அருகில் நேற்று அதிகாலை 5:00 மணியளவில் வந்தபோது, பஸ்சின் முன் பகுதியில் புகை வருவதை ஓட்டுநர் கவனித்தார். உடனடியாக பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு, பயணியரை கீழே இறங்கும்படி கூச்சலிட்டார். பயணியர் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் பஸ் முழுதும் தீப்பற்றியது. தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த அவர்கள், போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிண்டிகனா போலீசார் விசாரிக்கின்றனர்.